இன்று என் தலைவன் இல்லை
சென்று வா நிலா!
- - - - - - - - - - - - - - - - - - -
மன்னவனே, மன்னவனே
என் காதல் தென்னவனே
என் தலைவன் நீ தானே,
உன்னை எண்ணியே வாடினேனே.
மனம் இளகி போகுதய்யா,
உடல் உருகி வேகுதய்யா,
நிலாக் கூட காயுதய்யா
சோறூட்ட என் தலைவன் இல்லை,
உடல் நிலை போனால்
மருந்து சாப்பிடலாம்.
உடல் இளைத்தால்
நீ தானே எனக்கு மருந்தாகிடுவாய்.
கட்டிய தாலியில் மஞ்சள் காயவில்லை,
தலையில் சூடிய பூக்கூட வாடவில்லை,
மலர்ந்த முகம் வாடியதே,
என் தலைவனைத் தான் தேடியதே,
நிலவொளியில் பேசிடுவோம்
காதல் செய்திடுவோம்,
நிலவுக் கூட ரசித்திடுமே
முழு ஒளியை வீசிடுமே,
என் தலைவன் அருகில் இல்லை
நிலவு மட்டும் வந்தென்னப் பயன்!
இன்று என் தலைவன் இல்லை
சென்று வா நிலாவே!
கண்ணீருடன் விடைக்கொடுத்தேன்.
தலைவனையே தேடுகிறேன்!
- - - - - - - - - - - - - - - - - - - -
அன்புடன்
இல.வீரபாண்டியன்
No comments:
Post a Comment