பொன் மொழிகள்
---------------------
தமிழ்த்தாய்
- - - - - - - - - - - -
1. தாயில் சிறந்த தாய் தமிழ்த்தாய்
மாற்றான்தாய் அவளுக்கு நிகரில்லை
2.மொழிகளில் மூத்தவள் தமிழ்த் தாய்
தேனாமிர்தமாய் இனித்திடுவாள்,
3. எத்தனை மொழிகள் அழிந்தாலும்
தமிழ்த்தாய் என்றும் சிரஞ்சீவி .
4. தமிழ் தாத்தா போற்றிய தமிழ்த்தாய்
வள்ளுவனை வளர்த்தவள் தமிழ்த்தாய் .
5. பாமாலை சூடியவள் தமிழ்த்தாய்
கவியே உருவானவள் தமிழ்த்தாய் .
-------------------------------------------
பணிவு
- - - - - - -
1. பணிவு வரும் முன்னே
பண்பு வரும் பின்னே
2 , பணிவுக்கு தலை வணங்கு
உலகு உன்னை வணங்கும்
3. பணிவாய் நீ இருந்திடு
பண்பாய் உன்னை மதித்திடுவார்.
4. பணிவு உன்னை நெருங்கினால்
பிணிகள் உன்னை விட்டோடிடும்
5. பயமும் பணிவும் இருந்திட்டால்
தோல்விகள் உன்னை கண்டு அஞ்சிடும்
- - - - - - - - - - - - - - - - - - - - - - - -
பணம்
_______
1 . பணம் இருந்தால் கூட்டம் சேரும்
பணம் இல்லையேல் விலகி ஓடும்
2 , பணத்தால் வந்த மதிப்பு
நிரந்தரமாய் நிலைப்பதில்லை.
3. பணம் அதிகம் சேர்த்தால் ஆபத்து
பணம் இல்லாவிட்டாலும் ஆபத்து.
4. பணம் பணம் பணம் இல்லையேல்
பிணமாய்தான் உலகம் பார்க்கும்
5. பணம் உன்னை வீழ்த்தும்
கல்வியே உன்னை உயர்த்தும்.
--------------------------------------
அறம்
------------
1.அறம் தவறிடாதே
வாழ்க்கையில் தோற்று போவாய்
2. அறம், பொருள், வீடு தேவைதான்
அறம் மட்டுமே உன்னைப் போற்றும்
3. அறம் செய்து வாழ்ந்தவர் சிலர்
புறம் பேசி வீழ்ந்தவர் பலர்
4. அறம் தலையைக் காக்கும்
புறம் பேசினால் தலையை வீழ்த்தும்
5. அறத்தை மட்டும் கடைப்பிடிப்போம்
புறம் பேசுவதை தவிர்த்திடுவோம்.
--------------------------------
அன்புடன்
இல.வீரபாண்டியன்
No comments:
Post a Comment