Wednesday, 22 November 2017

குலை குலையாய்....

குலை குலையாய்  முந்தரிக்காய்
என ஆடிய ஆட்டம் எங்கே!
சுளை சுளையாய் புளியங்காய்
பறித்துத் தின்ன காலம் அங்கே!
மண்ணோடு மண்ணாக
உழன்று விளையாடிய காலம்தான் எங்கே!
கூட்டாஞ்சோறு சமைத்து
கூட்டாக அமர்ந்த காலங்கள் எங்கே!
கணினி வந்தது காலங்கள் மாறியது,
இணையம் வந்தது உலகம் சுருங்கியது,
பழையன கழிந்திட,
புதியன புகுந்திட,
காலம் ஓடிய ஓட்டத்தில்
சிறார்களின் பயணம் முடங்கியது,
கையடக்க கைப்பேசி
சுதந்திரத்தை பறித்தது!
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
அன்புடன்
இல.வீரபாண்டியன்

No comments:

Post a Comment