Wednesday, 22 November 2017

அன்னையவளே

அன்னையவளே பெருங்கொடையன்றோ
மற்றவர் சொல்ல கேட்டதுண்டு,
நான் அனுபவத்தில் பார்த்தது இல்லை
பெற்றுது மட்டுமே அன்னை,
நானோ தாத்தா பாட்டி வளர்ப்பினிலே,
தாயின் பால் சுவை அறிந்ததில்லை ,
அதனால் தேகம் மெலிந்தவன் ஆனேன்,
ஊஞ்சல் தான் அன்னையின் தாலாட்டு,
பாசம் துளியும் அறிந்ததில்லை,
உணவு கொடுத்தவரே அன்னை,
ஊட்டிவிட இல்லை அன்னை,
குழந்தைக்கு அன்ன ஊட்டிவிடும்
காட்சிகள் மட்டும் கனவாய் வந்ததே,
ஏக்கம் மட்டும் வாழ்க்கையாய்,
பண்டிகை புத்தாடை எல்லாம் கனவாய்
கசக்கிக் கட்டிய கிழிந்த ஆடைகளில்
திரிந்த காலங்கள்,
ஒழுகும் மூக்கை
சிந்த ஆளில்லாத துக்கம்,
கடவுளின் ஆசியால்
நல்லவர்களின் உதவியினால்,
இன்று என் வளர்ச்சியை
கொண்டாட ஆளில்லாமல் ஆனேன்,
குப்பைத் தொட்டி தத்துக் கொடுத்த
குழந்தை நான்
--------------------
அன்புடன்
இல.வீரபாண்டியன்

No comments:

Post a Comment