Sunday, 5 November 2017

மாதத்தின் முதல் நாள்

மாதத்தின் முதல் நாள்
---------------------------------
மாதம் பிறந்தது
ஊதியம் வந்தது
வந்த வழி தெரியலையே
சென்ற வழி காணலையே,
வீட்டுக்கு வாடகை கொடுத்தேனே,
மின் கட்டணம் நான் செலுத்தினேனே,
குடிநீருக்கு ரூபாய் கொடுத்தேனே,
மளிகைக்கடை பாக்கியும் கொடுத்தேனே,
பதினைந்து நாளை தாண்டவில்லை
வந்த ஊதியம் கையில் தங்கவில்லை
முகம் எல்லாம் வாடிப் போக
குடும்ப சுமையும் இங்கே கூடிப் போக
விலைவாசி எடக்கு முடக்காய் ஏறிப்போக
திட்டமிட்ட செலவு இப்போது கூடிப்போக
புதுப் புது நோயெல்லாம் வந்துப்போக
இடை இடையே மருத்துவச் செலவும்
பெருகிப் போக
முடியலையே முடியலையே
அட சமாளிக்க முடியலையே,
மாதத்தின் இறுதியிலே
நாம் படும் பாடுத்தான்,
திண்டாட்டமே வாழ்க்கையாய்
மாதத்தின் முதல் நாள் இன்று
பணம் கையில் நிறையுமே,
குடும்பமே மகிழ்ச்சியாய்
கொண்டாடி மகிழ்ந்திடுமே!
----------------------------------
அன்புடன்
இல.வீரபாண்டியன்

No comments:

Post a Comment