Sunday, 5 November 2017

மெல்ல விலகும் ஆயுள்

மெல்ல விலகும் ஆயுள்
--------------------------------------
கம்மங் கஞ்சி குடித்த மக்கள்
நூறு வயதை தாண்டி வாழ்ந்தனரே
நவீன உணவை உண்டார்கள்
முப்பது வயதிலேயே மாண்டர்களே,

இயற்கையான விவசாயம்
பசுஞ்சாணி உரத்தினாலே,
வேப்பெண்ணெய் தெளித்ததாலே
பயிரெல்லாம் நன்றாய் விளைய
மனிதரெல்லாம் சுகமாய் வாழ
நோய் நொடி நெருங்கியதில்லை.

செயற்கை முறை விவசாயம் வந்தது,
செயற்கை உரங்கள் விஷமாய் மாறியது
விஷ மருந்துகள் உணவில் கலந்தது.
புதுப் புது நோய்கள் பறந்து வந்தது,
மருத்துவத்தை நாடியே
மனித குலம் சென்றது.

புகையிலையை உணவாய் உண்டதாலே
புற்றுநோய் உயிரைக் கொல்லுதே
போதைக்கு மனிதன் அடிமையானதாலே
வீட்டையும் நாட்டையும் கெடுத்ததே,
உணவே மருந்து என்றோம்,
உணவெல்லாம் விஷமாய் மாறியே
மெல்ல ஆயுள் விலகி வருகிறதே!
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
அன்புடன்
இல.வீரபாண்டியன்

No comments:

Post a Comment