Sunday, 5 November 2017

நீர்க்குமிழி

நீர்க்குமிழி
------------------
காற்றடைத்த பையடா
காற்றில்லையேல் சாகுமடா
நீரிலே உருவானது,
நீரை ஊற்றினால் மாண்டுவிடும்.
ஏழு வண்ணங்களும் தெரிந்திடும்,
ஏழு ஜென்மமும் அறிந்திடும்,
நீர்க்குமிழி நொடியில் மாண்டுவிடும்
உயிர்க்குமிழி ஆண்டு அனுபவித்து
மாண்டுவிடும்.
குழந்தைகள் துரத்தி விளையாடும்
உயிரிலே விதியோ வருத்தி விளையாடும்,
நீர்க்குமிழியும் உயிரும் ஒன்றல்லோ
- - - - - - - - - - - - -
அன்புடன்
இல.வீரபாண்டியன்

No comments:

Post a Comment