மறக்க முடியுமா மனமே!
- - - - - - - - - - - - - - - - - - - - -
துள்ளித் திரிந்த கனாக்காலங்கள்
பல்லாங்குழி ஆடிய இளஞ்சிட்டு பருவம்,
கூடிச் சென்ற பள்ளிக் காலங்கள்,
அரட்டையடித்த கல்லூரிக் காலங்கள்
மறக்க நினைத்தாலும் மறக்க முடியுமா மனமே!
சிறிய வயதில் தாயை இழந்தது,
வறுமையில் உழன்றது,
அன்பிற்காக ஏங்கியது,
பாசம் காட்ட ஆளில்லா வாழ்க்கை,
சோறூட்ட தாயில்லா துக்கம்
மறக்க நினைத்தாலும்
மறக்க முடியாத வேதனை பருவம்
அழகான பள்ளி பருவக் காதல்,
அறியாத வயதில் துளிர் விடும் பாசம்
வேதனையில் ஓர் ஆறுதல்,
நினைத்தாலும் மறக்க முடியலையே!
கடந்தக் காலங்கள் திரும்பாது,
நினைவோட்டத்தில் மலர
கண்ணில் கண்ணீராய் வழிய
வேதனைகளை மறக்க
முடியுமா மனமே!
- - - - - - - - - - - - - - - - - -
அன்புடன்
இல.வீரபாண்டியன்
No comments:
Post a Comment