யார் அந்த மயில்
-------------------------
என் நெஞ்சைத் தொட்டுச் சென்றாளே,
யார் அந்த மயில்
நான் முன்னே நின்று பார்க்க,
அவள் கண்களால் என்னை சுட்டெரிக்க,
பின்னால் சென்று சிரிக்கிறாள்,
மவுனமாய் பேசினாள்
காதல் பார்வை பார்த்திட்டாள்,
தாமரையாய் மலர்ந்த முகமது
நினைத்தாலே நெஞ்சம் இனிக்கிறது,
உள்ளம் உருகுகிறது,
சர்க்கரையாய் கரைகிறது,
பட்டாம் பூச்சியாய் பறக்கிறது,
அழகிய மயிலாய் வந்தாள்
மனதைக் கொத்திச் சென்றாள்.
மின்னல் கீற்றாய் வந்துச் சென்றாள்,
மேகத்தில் நிலவாய் மறைந்திட்டாள்,
மான் குட்டியாய் ஓடிச் சென்றாள்,
என் மனதைப் பறித்துச் சென்றாள்
நினைக்காமல் இருக்க முடியவில்லை,
கண்ணை இமை மூடிட முடியவில்லை,
என் மனம் முழுதும் ஆக்கிரமித்தாள்,
அழகு தேவதையாய் வந்துச் சென்றாள்,
யார் அந்த மயில்
---------------------------
அன்புடன்
இல.வீரபாண்டியன்
No comments:
Post a Comment