Sunday, 5 November 2017

மடமையின் உறுத்தல்

மடமையின் உறுத்தல்
- - - - - - - - - - - - - - - - - - - - - - -
மடமையின் உறுத்தல் அது
மனிதனின் தெரிந்தே செய்த தவறு,
ஆறறிவு படைத்த மனிதன்
தவறை தெரிந்தே செய்திடுவான்,
பின் நினைத்து வருந்திடுவான்,

அழகான பெண்ணை ரசித்திடு
அவள் அனுமதியின்றி தீண்டாதே,
தீண்டிய பின் வரும் பாவத்தை சுமக்காதே,
சிற்றின்பத்திற்கு மயங்காதே,
மயங்கி அறிவை இழந்திடாதே,
பேரின்பம் உன்னை விட்டோடிடும்.

போதை அது மதுவால் வரும்,
சிறு மூளை மயங்கியதாலே
ஈனச் செயல்களை செய்திடுவாய்,
தெரிந்தே நீ குடித்திட்டாய்
தீராத வினையை தேடிக்கொண்டாய்
இனி மனம் உறுத்தி என்ன பயன்

மது, மாது போதைக்கு மயங்காதே
இந்தப் பிறவி மீண்டும் கிடைக்காது,
அதிசயப் பிறவி மனிதப் பிறவி
சாதனைகள் பல செய்திட வேண்டும்
வாழ்க்கைதனை சிறப்பாய் வாழ்ந்திட
மடமை செயல்களை செய்திடாதே
- - - - - - - - - - - - - - - - - - - -
அன்புடன்
இல.வீரபாண்டியன்

No comments:

Post a Comment