நிசத்தின் நிழல்
___________________
நிசத்தின் நிழலதனை மறைத்தான்,
அமைதியான திருநாட்டினிலே,
பீரங்கியால் தகர்த்தான்
மனிதர்களின் மனக்கோட்டையை,
எங்கும் பார்க்க மனித சாவு
துண்டு துண்டான மனித உடல்கள்,
குழந்தைகள் பாலுக்கு ஏங்கிய ஏக்கம்
இறந்த தாயின் மாரில் பால் குடித்த அவலம்,
இளம் பெண்களின் கற்பை குடித்தார்களே,
மாரை வெட்டி எறிந்தார்களே,
வேலியே பயிரை மேய்ந்ததே,
அய்யகோ! மக்களை காப்பது யாரடா.
சல்லிக்கட்டுக்கு மல்லுக்கட்டும் தமிழா
அன்று சிங்கம் என்பதை மறந்தாய்,
உன் சகோதரிகள் கற்பை இழந்தாய்,
சகோதரர்களை இழந்தாய்.
அன்று பொறுமை காத்திட்டாய்,
பல உயிர்களை பறிக்கொடுத்தாய்,
இன்று வெகுண்டெழுகிறாய்,
பண்பாடு, பாரம்பரியத்திற்காக
போராடும் தமிழா,
உன் ரத்த உறவிற்காக போராடு.
தாமதத்திலும் தாமதம்,
பரவாயில்லை,
இனியாவது ஈழத்திற்கு குரல் கொடு
நிசத்தின் நிழலாக இருந்துவிடு,
- - - - - - - - - - - - - - - - - - - - - -
அன்புடன்
இல.வீரபாண்டியன்
Wednesday, 22 November 2017
நிசத்தின் நிழல்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment