Wednesday, 22 November 2017

மனிதா

படக்கவிதை
- - - - - - - - - - - - -
குரங்கிலிருந்து பிறந்த மனிதா!
நெருப்பைக் கண்டாய்,
சக்கரத்தை கண்டறிந்தாய்,
வேளாண்மைக்கு வித்திட்டாய்,
நாகரிக உடையணிந்தாய்,
உடல் முழுவதையும் மறைத்திட்டாய்,
மெய்ஞானத்தை மறந்தாய்,
விஞ்ஞானத்தை வளர்த்தாய்,
கணினியில் மூழ்கினாய்,

மனிதத்தை மறந்தாய்,
நாகரிக உடையினை களைந்தாய்,
கவர்ச்சி என்று திரிகிறாய்,
அன்பு பாசத்தைக் கொன்றாய்,
தாய் தங்கையை மறந்தாய்,
மது, மாதுவிற்கு அடிமைப்பட்டாய்
நல்ல எண்ணங்களை புதைத்துவிட்டாய்,

மிருக மனம் படைத்தாய்,
நொடிக்கு நொடி மாறுகிறாய்,
வன்முறைக்கு வித்திட்டாய்,
அமைதியை குலைத்திட்டாய்,
மனிதா, மீண்டும் குரங்காய் ஆனாயோ!
- - - - - - - - - - - - - - - - - -
அன்புடன்
இல.வீரபாண்டியன்

No comments:

Post a Comment