சிறகெழுதும் கவிதை
- - - - - - - - - - - - - - - - - - - - - - - -
அன்புள்ளம் கொண்ட தமிழர்களுக்கு
சிறகெழுதும் கவிதை
வெற்றியுடன் தொடங்குகிறேன்,
சல்லிக்கட்டில் மல்லுக்கட்டி வெற்றி வந்ததே!
தமிழராய் பிறந்தால் மானம் இருக்கும்,
ஒவ்வொருவரின் தன்மானத்தை கண்டேன்,
தமிழர்க்கு அசாத்திய திறமையுண்டு
போராட்டக் களத்தில் கண்டேன்.
போராட்டம் என்றால் கலவரம்.
கர்நாடகாவில் கண்டேன்
இது தான் போராட்டம் என்றாய்,
வரலாற்றுத் தீர்ப்பை எழுதினாய்,
காந்தி நாடு என்பதை பறைசாற்றினாய்.
உலகமே வியந்தது, தமிழன் மிளிர்ந்தான்.
தமிழின் சிறகாய் கர்வப்படுகிறேன் நான்.
________________
அன்புடன்
இல.வீரபாண்டியன்,
நிருபர், தினத்தந்தி
பாரதியார் வீதி
வடக்கு பெரியார் நகர்
விருத்தாசலம்
செல் : 99435 49913
No comments:
Post a Comment