என்றும் என் நினைவில் நீ
- - - - - - - - - - - - - - - - - - - - - - -
துயில் எழுந்தேன்,
மயிலாய் என் முன்னால் நிற்கிறாய்,
குளிக்கச் சென்றேன்
தண்ணீரில் முகத்தைக் காட்டிட்டாய்
அள்ளி அணைக்க முயன்றேன்,
தண்ணீர் மட்டுமே
கரங்களில் வடிந்து விழுந்தது,
உணவருந்த அமர்ந்தேன்,
தட்டில் கூட உன் முகமே
உணவருந்த மறந்தேன் ,
தண்ணீரை குடிக்க முயன்றேன்,
தாகம் தீர்க்க முடியாமல் தவிக்கிறேன்,
நடந்து சென்றேன்,
பின்னால் வருகிறாய் என
திரும்பிப் பார்க்கிறேன்,
என் நிழலைக் கண்டு ஏமாற்றமாய்,
அண்ணாந்துப் பார்க்கிறேன்,
மேகக்கூட்டத்தில் உன் உருவம்
ஆச்சரியத்தில் நான் மூழ்க
இமைகள் மூடினேன்,
முன்னால் நிற்கிறாய்,
கண்களைத் திறந்துப் பார்க்கிறேன்,
மறைந்துப் போனாய்,
மறக்க நினைத்தேன்,
நினைவாய் வருகிறாய்,
என்னுள் ஏதேதோ மாற்றங்கள்
நிகழ்த்துவது நீயென அறிந்தேன்,
தேடிப் பார்த்தேன்,
மறைந்துப் போனாய்,
என்றும் என் நினைவில் நீ
- - - - - - - - - - - - - - - - - - -
அன்புடன்
இல.வீரபாண்டியன்
Sunday, 5 November 2017
என்றும் என் நினைவில் நீ
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment