கணவன் கொடூரமானவனானால்
அவனை திருத்திவிடு,
போதையில் உழல்பவனா,
அவனை நீ விடாப்பிடியாய் தடுத்திடு,
அவன் கடுஞ்சொற்கள்
உன்னைக் கொல்கிறதா,
அன்பை காட்டிவிடு,
மாற்றான் தோட்டத்தின்
மல்லிகையை நாடுபவனா,
உன் அழகை காட்டிவிடு,
அவன் கேட்பதை கொடுத்துவிடு,
கண்ணகி வேடம் மனைவிக்கு பொருந்தாது,
அவனிடம் மாதவியாய் இருந்துவிடு
அவன் குணமறிந்து நடந்திடு,
சந்தேகப் பார்வை வேண்டாம்,
கூடி அமர்ந்து பேசிடு,
மனம் விட்டு பேசிட்டால்
துன்பங்கள் பறந்து ஓடி விடும்,
பெண் அவள் பிணமல்ல,
காட்சிப் பொருளும் அல்ல,
மோகத்தின் முத்திரையும் அல்ல
கணவனுக்கு அடிமையும் இல்லை
மனைவியின் அன்பில்
திருந்தாதவன் கணவனே இல்லை,
அவன் மனிதனும் இல்லை,
மிருகத்துடன் வாழ்வதை விட
சாதலே மேல்-அவனை
மனமே மறந்து விடு
---------------------------
அன்புடன்
இல.வீரபாண்டியன்
Sunday, 5 November 2017
கணவன்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment