விருது
_____________
கனவுகள் நினைவாகும் போது
கிடைத்திடும் விருது,
போராட்டத்தில் வென்றிட்டால்
கிடைத்திடும் விருது,
ஒவ்வொரு குழந்தைக்கும்
கடவுள் கொடுத்த விருது
தாயும், தந்தையும்.
தாய்க்கு தந்தை கிடைத்தது,
தந்தைக்கு தாய் கிடைத்தது,
இருவருக்கும் நாம் கிடைத்தது,
நல்ல ஆசான் கிடைப்பது,
அந்த ஆசானிடம் நற்சான்று பெறுவது,
எல்லாம் தவமின்றி கிடைத்த விருதுகள்.
அழகான காதலி(லன்) கிடைப்பது,
அதே காதலி ( லன்) துணையாய் அமைவது,
எதையும் எதிர்ப்பார்க்காத
தூய்மையான நட்புக் கிடைப்பது,
தோளில் சாய தோழனும்
தோழியும் கிடைப்பது
எல்லாம் கடவுள் கொடுத்த விருதுகள்,
நான் கவிஞனாகியது,
என்னை அங்கிகரித்தது,
ஊக்குவித்து என்னை ஆக்கம்
செய்ய தூண்டும்
நிலாமுற்றம் கொடுக்கும்
முத்திரைகள்
எனக்கு கிடைத்த
மிகப்பெரிய விருதல்லவா!
- - - - - - - - - - - - - - - - - - -
அன்புடன்
இல.வீரபாண்டியன்
No comments:
Post a Comment