கூட்டாஞ்சோறு
- - - - - - - - - - - - - - - - - - - -
கூட்டாய் நாங்கள் கூடிடுவோம்,
கூட்டாஞ்சோறு வடித்திடுவோம்,
கூடி உண்டு மகிழ்ந்திடுவோம்,
கூட்டணியை புதுப்பித்திடுவோம்
கூட்டுக் கதைகள் பேசிடுவோம்
கும்மியடித்து மகிழ்ந்திடுவோம்
கூடெல்லாம் பாயமாட்டோம்,
அன்பாய் நாங்கள் இருந்திடுவோம்.
சாதிகள் கூட பார்க்க மாட்டோம்,
மதத்தால் நாங்கள் பிரியமாட்டோம்,
என்றும் நட்பாய் இருந்திடுவோம்,
பகைமையை விரட்டியடித்திடுவோம்.
---------------------------------------------
அன்புடன்
இல.வீரபாண்டியன்
No comments:
Post a Comment