Wednesday, 22 November 2017

ஏறு தழுவுதல்

ஏறு தழுவுதல்
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
ஏறு தழுவுதல் எங்கள் உரிமை
அதனை பறித்ததிங்கே யாரடா.
பண்பாடு எங்கள் பாரம்பரியம்
முடக்க நினைப்பது யாரடா,
தமிழராய் ஒன்றுப்பட்டோம்,
தலைக்குனிய செய்வது யாரடா.
பழம்பெருமையை காத்திடுவோம்,
சட்டம் போட்டு தடுப்பது யாரடா,
காளையை அடக்கினால் பெண் கொடுப்பார்
உன்னை அடக்கினால் வெறுத்திடுவார்,
பீட்டா உன்னை அடக்கிடவே,
மாணவராய் ஒன்றுப்பட்டோம்,
தலைவர்கள் கூட்டாத கூட்டம்
சரித்திரம் படைத்திடும் கூட்டம்,
தமிழ்ச்சிகள் வெகுண்டெழுந்த கூட்டம்,
சாதனை படைத்திடும் கூட்டம்
தடை அதை உடைத்திடுவோம்
ஜல்லிக்கட்டை நடத்திடுவோம்,
எதிரிகளின் சூதை விரட்டியடிப்போம்,
தமிழராய் தலை நிமிர்ந்திடுவோம்!
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
அன்புடன்
இல.வீரபாண்டியன்

No comments:

Post a Comment