கருவாச்சியின் காதல்
- - - - - - - - - - - - - - - - - -
- - - - - - - - - - - - - - - - - - - - - - - -
கருவாச்சியே கருவாச்சியே
குடம் தூக்கிப் போறவளே
கருவண்டு அழகி நீ
மாமன் நான் கூப்பிடுறேன்
ஓடி வா கட்டழகியே,
கருவிழி கருத்தக் கண்ணம்மா
உன் உதடு என்ன சொல்லுதம்மா,
மொறச்சி நீயும் பாக்குறியே,
கரும்புப் போல இனிக்குறியே.
கிட்டே வந்தா ஓடுற,
மாமனத்தான் வெறுக்குற.
ஓடி விளையாடயில ரசிக்கிற
ஒளிஞ்சி நீயும் பாக்குற,
மாமன் கம்பெடுத்து சிலம்பம் சுத்த
உன் ரெட்ட சட என்னை சுத்த
மஞ்சு விரட்ட நான் போனேன்
மஞ்ச தாவணியில வந்தவளே,
காளையை நான் அடக்கிப்புட்டேன்,
சல்லிக்காச எடுத்துப் புட்டேன்
மஞ்சக் கயிரோட நான் வாரேன்.
தென்னந்தோப்பு பக்கமிருக்கு
குயில்கள் கூவி அழைக்குதடி,
வாழத்தோப்பு அக்கமிருக்கு
மைனாக்கள் பாடி அழைக்குதடி,
காத்தால போனோ முன்னா
காதல் கவிதை படித்திடலாம்,
வாழ்க்கை கதை பேசிடலாம்.
தேகம் குளிர்ந்து போச்சுதடி
முத்தம் ஒன்னு வேணுமடி
குளிர தணிக்க வேணுமடி.
கருவாச்சி வாடிப்புள்ள
கருத்த மச்சான் கூப்பிடுறேன்,
- - - - - - - - - - - - - - - - - - - -
அன்புடன்
இல.வீரபாண்டியன்
No comments:
Post a Comment