Wednesday, 22 November 2017

தமிழ் மண்

தமிழ்மண்
------ --------------- - - - - - - - -.-... ---..
உலகை ஆண்ட தமிழ் மண்,
பண்பாட்டை போற்றிடும் மண்,
பாரம்பரியத்தை காத்திடும் மண்,
தன்மானத்தை விட்டுக்கொடுக்காத மண்.

ஜல்லிக்கட்டு எங்கள் உயிர் மூச்சு,
காளையை அடக்குவதெங்கள் உரிமை,
எங்களோடு மல்லுக்கட்டும் ஈனர்களே,
எங்கள் காளைகளுக்கு ஈடாகுவீரோ.

பாட்டன், முப்பாட்டன்
அடக்கினான் காளையை,
எங்களை அடக்கிட பீட்டா நீ யாருடா!
அடக்கிட நினைத்தால் அடங்கிப் போவாய்,
நாட்டுக்காளை எங்கள் காளை
அழிக்க நினைத்தால் அழிந்துப் போவாய்!

முதலில் தோன்றியக்குடி தமிழ்குடி
கனத்த புகழோடு தோன்றியக்குடி
குடியை கெடுத்தவனே,
என் குடியை கெடுக்க நீ யாருடா,

மாமிசம் தின்றால் தவறல்ல
காளையை அடக்கினால் தவறோ?
மூடனே, இது எமது மண்,
என் உரிமையை பறிக்க
உமக்கு உரிமையேது!
ஜல்லிக்கட்டை நடத்திடுவோம்,
அதுவரை போராட்டத்திற்கு ஓய்வேது!
- - - - - - - - - - - - - - - - - - - - - - -
அன்புடன்
இல.வீரபாண்டியன்




No comments:

Post a Comment