கனவிலும் உன் நினைவே
-----------------------------------------
கனவிலும் உன் நினைவே,
கண்ணை மூடினால் உன் முகமே,
நினைவைக் கூட ஆக்கிரமித்தாய்,
தீண்டாமல் தீண்டுகிறாய்,
தொடாமல் தொடுகிறாய்,
பேசாமல் பேசுகிறாய்,
சிரிக்காமல் சிரிக்கின்றாய்,
முன்னால் சூடாகிறாய்,
பின்னால் புன்னகை செய்கிறாய்,
மரணத்தைக் கூட வென்றிட்டேன்
உன் பார்வையில் தோற்றேன்,
சுட்டும் விழியால் கட்டிப்போட்டாய்,
சுடர்விடும் பார்வையால் காதல் செய்கிறாய்,
பூஞ்சோலையும் தலைசாய்ந்தது,
உன் வருகையை வரவேற்றது,
சமுத்திரமும் ஸ்தம்பித்தது,
நீ கடல் அலையை தொட்டுச் சென்றதால்.
வானம் கூட திரண்டிடுது,
உன் கொள்ளை அழகை ரசிப்பதற்கு,
மழையும் சாரலாய் தூரலாய் வந்தது
உன்னை தழுவிச் செல்வதற்கு.
வானவில்லும் மறையவில்லை,
உன்னை காணாமல் மறைய மனமில்லை.
அழகுக் கிளிகள் பேசிடுது,
உன் அழகைக் கண்டு கீச்சிடுதே.
அழகு மானே காதல் கொண்டேன்,
உறக்கத்தை களைய மனமில்லை,
உன் நினைவை சுமந்தே சென்றிடுவேன்,
காதல் கோட்டை கட்டிடுவேன்
__________________________
அன்புடன்
இல.வீரபாண்டியன்.
Wednesday, 22 November 2017
கனவிலும் உன் நினைவே
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment