Wednesday, 22 November 2017

தனிமரம்

தனிமரம்
- - - - - - - - - - - - - -
தாயுண்டு, தந்தையுண்டு
பிறந்த போது தனிமரம்,
ஏதோ ஒருபறவையின் எச்சம்,
யாரும் இல்லாத கானகத்தில் மிச்சம்
ஓராயிரம் பறவைகளின் வசிப்பிடம்,
ஊஞ்சல்ஆட விழுதுகள் உண்டு,
துணைக்குத்தான் ஆளில்லை,
தாய்பாசத்தை அறியாநான் - பறவைகளின்
குழந்தைப்பாசத்தை அனுபவித்தேன்,
எங்கிருந்தோ ஒருவன் வருகிறான்,
ஆ என்னையே நெருங்குகிறான்
யார்அவன்? விறகுவெட்டியா?
வந்தான் , என்வேரினில் தலைசாய்ந்தான். ஓய்வெடுத்தான்.
நான்பயத்தில் மிரண்டே போனேன்,
சென்றான்,
மறுநாள், அய்யகோ! அவன்வருகிறானே!
கையில் கோடாரி,
என்குழந்தைகள் ஆகிடும் அனாதையாய்
என்னைப்போல் ஆகிட விடமாட்டேன்,
கடவுளே என்ன செய்வேன்,
கடவுளின் கருணையினால்
வானம்பிளந்தது,
மின்னல் கீற்றிட இடிமுடிக்கம் தாளமிட
மரத்தின் கீழ் பதுங்கிய
மரம் வெட்டியை
மின்னல்தாக்கிட மாய்ந்து போனான்,
ஆனந்தக்கண்ணீராய் மழைநீர்
மரத்தின் இலையில் பட்டு
அவன்மீது விழ
நிம்மதி பெருமூச்சி தனிமரத்திற்கு!
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
அன்புடன்
இல.வீரபாண்டியன்

No comments:

Post a Comment