Wednesday, 22 November 2017

ஜல்லிக்கட்டு

ஜல்லிக்கட்டு
_________________
ஜல்லிக்கட்டு நீயும் மல்லுக்கட்டு,
தடையை நீ்க்கி அள்ளிக்கட்டு,
வீரமான தமிழன் நாங்கள்,
வீரத்தோடு ஏறு தழுவிடுவோம்.

சாயப் பொடி வீசி விளையாடுபவர்களே,
எங்கள் காளைகளுக்கு ஈடாகுவீர்களோ,
வங்கக்கடலும் பொறுமை இழந்தது,
தமிழர் உணர்வை பார்த்தே சீரிடுது,

தமிழர் ஒற்றுமையை வானம் பார்க்குது,
மேகக்கூட்டமும் கண்ணீர் விடுது,
சுனாமியே வந்தாலும்,
பூமித்தாயே அதிர்ந்தாலும்
வானமே இடிந்தாலும்,
வெற்றி வரை போராடுவோம்.
நாளைய வரலாறு போற்றிடும் எங்களை.

வாக்கு மட்டும் அரசின் நோக்கம்,
ஆட்சியில் அமர்த்தி பார்த்திட்டோம்,
ஆட்சியை கவிழ்க்க முடியுமென்போம்,
தலைவர்கள் திரட்டாதக் கூட்டம்
தமிழ் உணர்வால் திரண்டக் கூட்டம்,

மத்திய அரசே அனுமதி கொடு
நீதிமன்றமே நீதி கொடு,
தமிழர் பண்பாட்டைக் காத்திடு
அது வரை போராட்டம் ஓயாது!
- - - - - - - - - - - - - - - - - - - - - -
அன்புடன்
இல.வீரபாண்டியன்

No comments:

Post a Comment