நீர் வளத்தை மீட்டெடுப்போம்
------------------------------------------
கிராமியக் கவிதை சிறப்பு சான்றிதழ்
போட்டியாளர்
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
நீர் வளத்தை மீட்டெடுப்போம்.
கையேந்தி நிற்க மாட்டோம் ,
ஆறுகளை தண்ணீர் ஓட பார்த்திருந்தோம்,
இப்போது காட்சிப் பொருளா பார்க்கிறோம்,
குளம் குட்டை எங்கேடா,
மானங்கெட்ட மனிதனே,
சொந்த சுகத்திற்கு அழித்தாயே,
இயற்கையெல்லாம் பாழ்படுத்தினாயே!
வருஷமெல்லாம் ஆத்துல தண்ணி ஓடும்
மழை பெய்தாலும் தண்ணிய காணல
சுரண்டுறான், சுரண்டுறான்
மண் வளத்தை சுரண்டுறான்,
அடிக்கிறான் அடிக்கிறான்
கொள்ளையா அடிக்கிறான்,
குறைந்துப் போச்சி குறைந்துப் போச்சி
நிலத்தடி தண்ணி குறைந்துப்போச்சி,
காயுதே, காயுதே
நிலமெல்லாம் காயுதே,
வானமும் பொழிய மறுக்குதே,
தண்ணி இல்ல தண்ணி இல்ல
தாகம் தீர்க்க தண்ணி இல்ல.
கையேந்தி நின்றது போதும்
தமிழக அரசு வேடிக்க பார்க்க
இந்திய அரசு அலட்சியம் காட்ட
பொறுத்தது போதும்,
போராடிய போராட்டம் வீணாய் போக
பொங்கி எழுந்து கூடிடடா.
ஏரியை நாமே தூர் வார வேண்டும்,
குளத்தை நாமே வெட்டிட வேண்டும்,
ஆற்றில் கால்வாய் கட்டிட வேண்டும்,
நமக்கு நாமே செய்திடுவோம்,
மழை நீரை சேமித்திடுவோம்
நீர் வளத்தை மீட்டெடுப்போம்'
_ _ _ _ _
அன்புடன்
இல.வீரபாண்டியன்
No comments:
Post a Comment