சுமை
________
பத்து மாதம் சுமந்த தாய்க்கு தெரியும்
சுமை என்னவென்று,
குடும்பத்தை ஆயுள் முழுவதும்
சுமக்கும் தந்தையின் சுமை
ஆண்டு அனுபவிக்கும் இன்பமான சுமை,
கற்களை வயிற்றில் கட்டிக்கொள்
மணிக் கணக்கில் நின்று விடு
பெற்றவளின் சுமை தெரியும்.
நெல் மூட்டையை சுமந்துப் பார்
தந்தையின் சுமை தெரியும் அப்போது,
ஆசிரியராய் ஒரு நாள் இருந்திடு
சுமையின் பாரம் உனக்கு தெரிந்துவிடும்,
சுமையாக இவர்கள் உணரவில்லை,
இன்பமான அனுபவமாய் உணர்ந்ததாலே,
நாம் சந்தோஷமாய் வாழ்கின்றோம்.
படிப்பதுக் கூட சுமையாக
வாழ்வதுக் கூட சுமையென்றால்
நீ சோம்பல் தனத்துடன் வாழ்கிறாய்,
படைக்கும் கடவுள்
சுமையென நினைத்து
படைக்கும் தொழிலை நிறுத்திட்டால்
உலகில் உயிர்கள் ஏதடா.
-------------------
அன்புடன்
இல.வீரபாண்டியன்
Sunday, 5 November 2017
சுமை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment