தாய் வீடு
--------------
தாய் வீடு அது கோவில்
தாயும், தந்தையுமே தெய்வம்,
பெண்ணாய் பிறந்ததால்
தாய் வீடு பிறந்த வீடாம்,
கணவன் வீடு புகுந்த வீடாம்,
கணவன் வீடே ஆயினும்
பெண்ணுக்கு சுதந்திரம் தாய் வீடே ,
துன்பத்தில் உழன்றாலும்
தாய் வீடே ஆறுதல்
கணவன் துன்புறுத்த
மனைவி தேடிடும் வீடு
தாய் வீட்டு சீதனம்
மனைவியின் பொக்கிஷம்
கணவன் ஆயிரம் முத்தங்கள் தந்தாலும்,
தாயின் உச்சி முகரும்
ஒரு முத்தத்திற்கு ஈடாகுமா,
பிள்ளைகள் காதணி விழா
உடன் பிறந்தவன் உரிமை விழா
மகளின் பருவத்திற்கு
தாய் வீட்டு சடங்குதானே சம்பிரதாயம்,
திருமணம் அது
இரு வீட்டு உறவை இணைக்கும்
மனைவியின் பந்தம்
தொப்புள் கொடி உறவாய்
தாய் வீடே அடையாளம்
- - - - - - - - - - - - - - - - -
அன்புடன்
இல.வீரபாண்டியன்
Sunday, 5 November 2017
தாய் வீடு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment