Wednesday, 22 November 2017

புதுக்கவிதை

புதுக்கவிதை
- - - - - - - - - - - - - - - -
கங்கையாம், காவிரியாம்
நதிகளுக்குக்கூட பெண்கள் பெயராம்,
இயற்கையை போற்றினோம்
படைத்த கடவுளை வணங்கினோம்,
பெண் தெய்வமாய் அடையாளம் கண்டோம்,
மானசீகமாய் போற்றுகின்றோம்,
உயிர் அதனை உருவாக்கிடும்
செடி, கொடி மரமெல்லாம் தெய்வங்களே,
அவற்றை போற்றிக் காத்திட்டால்
தீமை நமக்கேது,
மரத்தையெல்லாம் வெட்டினோம்,
மழையும் பொய்த்தது,
மனிதா நீயும்
எத்தனை மரத்தை வெட்டினாய்,
எத்தனை மரத்தை நீ நட்டிட்டாய்
சிந்தித்து பார்த்தாயா,
காட்டையெல்லாம் அழித்து விட்டாய்
வீடுகளாய் கட்டிக் குவித்தாய்,
வன உயிர்களையும் அழித்தாய்
சமநிலையை சீர்குலைத்தாய்,

உயிர் வாழ தேவை மரங்கள் தானே,
மரங்களை நீங்கள் அழித்ததாலே,
நச்சு வாயு பெருகியது அங்கே
உயிர்கள் பல அழியுது இங்கே.
மரத்தை நீங்கள் வெட்டியதாலே,
சித்திரையில் மழையாய்,
ஆடியில் அனலாய்,
கார்த்திகையில் பனியாய்
பங்குனியில் காற்றாய்
காலங்கள் எல்லாம் மாறியதே,
அறிந்திடாத அறிவியல் மனிதா,
பூகம்பத்தால் ஆட்டம் கண்டாய்,
சுனாமியால் சுருண்டு விட்டாய்,
தானே புயலில் தடுக்கி விழுந்தாய்,
பெருமழையில் பொறிந்துப் போனாய்,
வறட்சியில் தற்கொலையால்
பிணமாய் ஆனாய்,
இன்னும் அனுபவம் தேவையா,
விழித்திடு மனிதா மாமனிதா
உலக சமநிலை நிலைத்திருக்க
இயற்கையின் நியதிக்கு தீங்கிழைக்காதே,
மரங்களை நாமும் வளர்த்தெடுப்போம்
உலகை அழிவிலிருந்துக் காத்திடுவோம்.
--------------------------------------_
அன்புடன்
இல.வீரபாண்டியன்




No comments:

Post a Comment