Wednesday, 22 November 2017

காற்றிலே கட்டிய கனவுக் கோட்டை

காற்றிலே கட்டிய கனவுக் கோட்டை
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
கோட்டை ஒன்று கட்டி வைத்தேன்
எங்கே என்று தேடிப் பார்த்தேன்,
திடுக்கிட்டு எழுந்துப் பார்த்தேன்,
காற்றிலே கட்டிய கனவுக் கோட்டையாய் காணாமல் போனதே!

செங்கல் வீடு கட்ட நான் நினைத்தேன்,
கூரை வீட்டையே அவன் கொடுத்தான்,
ஒரு படி நான் ஏற
பத்து படி சருக்கி விழுந்தேன்,
என் வாழ்க்கை கோட்டை
கனவு கோட்டையானதே.

ஒற்றுமை வேண்டும் என்றோம்
வேற்றுமையை அவன் தந்தான்,
சாதிகள் பார்த்தே பழகுகிறான்,
இனத்தால் ஒன்று பட மறுக்கிறான்,
ஒற்றுமைக்காக கட்டினேன் கோட்டை
காற்றிலே கட்டிய கனவு கோட்டையானதே!

நல்ல உணவு கேட்டோம்
உடுத்த உடையை கேட்டோம்
நல்ல குடிநீர் கேட்டோம்,
உறங்க உறைவிடம் கேட்டோம்,
கிடைக்கும் என்றார்
ஓட்டுப் போட்டோம்.
ஒன்றும் கிடைக்கலையே,
ஏக்கம் மட்டுமே வாழ்க்கையாய்
கனவுக் கோட்டை கலைந்ததே

அவன் நல்லவன்,
இவன் நல்லவன்,
யாரை நம்புவது,
நம்பியவர் மோசம் செய்ய
ஆட்சிகள் மாறியது,
காட்சிகள் மட்டும் மாறலையே!
-----------------------------------------
அன்புடன்
இல.வீரபாண்டியன்







No comments:

Post a Comment