Sunday, 5 November 2017

சாளரம்

சாளரம் (ஜன்னல்)
- - - - - - - - - - - - - - - - - -
ஜன்னல் ஓரம் மல்லிப் பூ வாசம்
திறந்துப் பார்க்க
பக்கத்து வீட்டு தேவதை
தாவணியில் பளபளக்க
கொண்டையில் தாழம்பூ சுமக்க,
வாசனையில் ஒரு சரித்திரம்
மனம் பட்டாம்பூச்சியாய் மாறியே
சுற்றுதே தேவதையே உன்னையே,
பட்டாம்பூச்சியை பிடிப்பதாக
என் மனதை பிடித்திட்டாள்,
அவள் கையில் அமர்ந்தே ரசித்திட்டேன்,
என்னை நானே மறந்திட்டேன்,
என்னைக் கொஞ்சிய அவளது உதடுகள்,
என்னை தவிக்க விடுகிறதே,
கண்கள் பட்டாம்பூச்சியாய் படபடக்க
அய்யகோ! மெய்மறந்தேன் நானே!
கனவு நினைவாக
இனி ஒரு ஜென்மம் இருந்தால்
கடவுளே என்னை
பட்டாம்பூச்சியாய் படைத்திடுக!
- - - - - - - - - - - - - - - - - - - - - - -
அன்புடன்
இல.வீரபாண்டியன்

No comments:

Post a Comment