Sunday, 5 November 2017

காட்சியும் கானமும்

காட்சியும் கானமும்
___________________
பெண்கள் இந்நாட்டின் கண்கள்,
பெண்ணை தெய்வமாய் வணங்கினான்,
தாயாய் போற்றினான்,
மாதா, பிதா, குரு, தெய்வம் என்றான்,
மாதாவையே முன் வைத்தான்,

பெண்ணை போற்றிடும்
சாதி எங்கள் சாதி
காட்சிப் பொருளாய் கண்டதில்லை
கண்கண்ட தெய்வமாய் வணங்கிட்டோம்,

தமிழச்சி வீரத்தை
வரலாற்றில் காணலாம்,
மெரினாவில் நேரில் கண்டதுண்டோ,
தமிழச்சியின் குரலது,
அரசியலின் அஸ்திவாரத்தை
ஆட்டியதே, காணலையா!

பெண் வீரத்திற்கு சான்றவள்,
எத்தனை ஆண் கயவனையும்,
வீரத்தால் வீழ்த்திடுவாள்,
பத்து ஆண்கள் நிறைந்திருக்க
பெண் அவள்
வீரத்தைக் காட்டினாளே,
தாலாட்டிய தமிழன்
வீரத்தை போற்றினானே,
தங்கை என்றான்,
மகள் என்றான்,
தன் வீட்டு பெண்ணாய் போற்றினான்,

நடந்துச் செல்லும் பெண்ணை
கேளிக்குள்ளாக்கும் ஆண்களிடையே,
தன்னைச் சுற்றி ஆண் கூட்டம்
சிங்கமாய் ஒரு பெண் உறங்க,
கலாச்சாரத்தின் மதிப்பு,
கண்ணியத்தை காத்தான் தமிழன்,
பெண் அவளை காத்திட்டான்
இவன்தாண்டா தமிழன் என்று
உலகமே மெச்சியது கேட்கலையா!
---------------------------
அன்புடன்
இல.வீரபாண்டியன்

No comments:

Post a Comment