Sunday, 5 November 2017

புறம் தள்ளிய சுயம்

புறம் தள்ளிய சுயம்
---------------------------------
புறம் தள்ளிய சுயமாய்
களம் கண்டோம்,
தீமைதனை புறம் தள்ளிட,
புறப்படடா மனிதா!
கூடா நட்பினை முறித்து விட
விழித்திடடா நண்பா,
நட்புக்கு இலக்கணம் வகுத்திடுவோம்
வாடா தோழா,

எதிர்க்க ஆளில்லை,
துணிந்தே அவன் செய்கிறான்,
கேட்க ஆளில்லை,
கண்டதை செய்கிறான்,
எதிர்த்து நிற்போம்
ஊழலுக்கு எதிராய்,
துணிந்திடுவோம்,
லஞ்சம் அதை
கொடுப்பதை தவிர்த்திடுவோம்,
விதிகளை மீறாமலே,
விதியின் வழி நடந்திடுவோம்,

நாமே விதிகளை வகுத்திட்டோம்
புறம் தள்ளி நாமே மீறிட்டால்
நல்லவனும் கெட்டுவிடுவான்,
தீயவைகள் செய்திடுவான்,

வளரும் நாடு பெயர் மட்டும் போதுமா,
ஆண்டுக் கணக்கில் வளரும் நாடாய்
இருந்தது போதும்.
இளைஞர்கள் கோடி கோடியாய்
இருந்தென்ன பயன்
புறப்படுவோம்,
புறம் தள்ளிய சுயமாய்
இந்தியாவிற்கு உழைத்திடுவோம்,
- - - - - - - - - - - - - - - - -
அன்புடன்
இல.வீரபாண்டியன்

No comments:

Post a Comment