Wednesday, 22 November 2017

அத்த மக

அத்த மக
_______________
மனசிருக்கா மனசிருக்கா அத்த மகளே
மனசுக்குள்ள இடமிருக்கா அத்த மகளே,
மாமன் மனசு காத்திருக்கு அத்த மகளே,
மச்சான் மனசுல சுமையில்லை
அத்த மகளே

செக்க செவந்தவளே என் அத்த மகளே,
கண்ணுக்கு கடலூரும் தாரேன்,
உதட்டுக்கு ஊட்டி மலையை தாரேன்
எட்டிக் கொஞ்சம் பாருடி,
சொக்கித்தான் போவேனடி.

இடுப்பழகியே என் அத்த மகளே
தொடையழகியே என் மாமன் மகளே,
பேச்சுக்கு பேரூர் மயங்கும்,
பல்லுக்கு பல்லாவரம் பின்னால் வரும்
உன் சிரிப்புக்குதான் சிங்கப்பூரும்
கதிகலங்கும்,
உன் இடையழகும், கொடியழகும்
தமிழகமே பின்னால் வரும் .

உன் கண்கள் பேசிட
கோயமுத்தூர் கலங்கியதடி,
உதடுகள் துடித்திட
உதகையும் சாரலில் நனையுதடி.
அன்ன நடையை பார்த்து
ஆத்தூரே சிரிக்குதடி,
சேலை கட்டும் அழகை பார்த்து
சேலமும் வெட்கி போனதடி.

மாமன் மனசு தங்கமடி,
உரசி நீயும் பாக்காதடி,
தீப்பொறியாய் பறக்குமடி,
மாமன் உரசினா தாங்கமாட்ட,
வேஷமெல்லாம் போடாதடி

அத்த மக ரத்தினமே
மாமன் பெத்த மரகதமே
குண்டு மல்லி வாங்கி வாரேன்,
நிலா காயும் நேரத்துல
ஆத்துப் பக்கம் வந்திடடி,
ஆற அமர பேசிடலாம்
முத்தம் கூட கொடுத்துக்கலாம்.

மாமன் நான் தேனெடுக்க
சொக்கி நீயும் போவியேடி,
இன்ப ரசம் பருகிடுவாய்
சொர்க்க லோகம் பார்த்திடலாம்.
ஓடி நீயும் வந்திடடி
ஏக்கம் கொள்ள வைக்காதடி.
- - - - - - - - - - - - - - - -
அன்புடன்
இல.வீரபாண்டியன்



No comments:

Post a Comment