Wednesday, 22 November 2017

முடிவல்ல ஆரம்பம்

முடிவல்ல ஆரம்பம்
----------------------------
சுதந்திர தாகத்தை கண்டீரோ,
விடுதலைத் தீயை பார்த்தீரோ,
காணாதவரே காணுங்கள்.
உரிமைதனை மீட்டெடுக்க
வீறு கொண்டெழுந்த கூட்டத்தை காணீர்.
ஆயுதம் எதுவும் தேவையே இல்லை.
ஆயிரம் கரங்களாய் இணைந்தோம்,
ஜல்லிக்கட்டை வென்றெடுப்போம்.
முடிவென்று நினைத்திடாதீர் இனி ஆரம்பமே
பீட்டாவை வெளியேற்றுவோம்,
விவசாயிகளை காத்திட திரளுவோம்,
அன்னிய பானத்தை விரட்டியடித்திடுவோம்,
கருவை மரங்களை வேர் அறுப்போம்,
ஊழலை எதிர்க்க ஒன்றாகக் கூடுவோம்,
கையூட்டுக் கொடுக்க எதிர்த்திடுவோம்
ஈழத் தமிழருக்கு குரல் கொடுப்போம்.
வஞ்சகர்களை தோற்கடிப்போம்,
நல்லாட்சி கொடுத்திட உழைப்போம்.
தமிழராய் ஒன்றுப் பட்டோம்
இன உணர்வால் வென்றிடுவோம்
-----------------------------------
அன்புடன்
இல.வீரபாண்டியன்

No comments:

Post a Comment