எங்கிருந்தோ வந்தான் எதிரி _ _ _ _ _ _ _
_ _ _ அநாதையாய் மனம் அழுகிறது.
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
எங்கிருந்தோ வந்தான் எதிரி,
பிஞ்சி மனதில் விதைத்தான் நஞ்சை
அமைதியான திரு நாட்டினிலே
சீர்குலைவை ஏற்படுத்தினான் எதிரி
மாது என்றும் பாராதவனே
பிஞ்சுக்குழந்தையையும் கொன்றாயே
தமிழன் என்ற காரணத்தில்
உனக்குள் ஏன் இந்த கொலைவெறி,
உன் பீரங்கியால் மாண்டவர் கோடி
ஊனத்தால் நாணிடும் பலர்,
இயற்கை மாரிப் பொய்த்திடவே
குண்டு மழைகள் பொழித்தாயே
எங்கெங்கும் மரண ஓலம்
கேட்டிடுவதை கேட்கவில்லையா,
ரத்த ஆறுகள் ஓடுவதை
நீயும் பார்க்கலையா!
கடலிலும் உன் தாண்டவமா,
கடல் நீரும் செந்நீராய் ஆனதை -
காணலையோ!
சொந்தத்தை இழந்தவர் பலர்
தாயை இழந்தார், தந்தையை இழந்தார்,
தன் குழந்தையை இழந்தார்,
மனைவியை இழந்தார் சிலர்
மனைவாளனை இழந்தோர் பலர்
இன்றோ அநாதையாய் மனம் அழுகிறது!
_______________________
அன்புடன்
இல.வீரபாண்டியன்
No comments:
Post a Comment