Sunday, 5 November 2017

பூவிதழ் தேடும் பூ

பூவிதழ் தேடும் பூவே
- - - - - - - - - - - - - - - - - - -
பூவிதழ் தேடும் பூவே
நீயே ஒரு மலர் என்பதை மறந்தாயா,
கொண்டையில் பூச்சூடினால் தான்
மணம் வீசும்
உன்னிடம் மலரில்லாமல்
மணம் கமழ்கிறதே.

நீ பூக்களை தேடும் அழகில்
பூக்கள் கூட தலை குனிந்ததடி,
வெட்கி நாணம் கொள்ளுதடி
அழகு ரோசா ஒன்று தாமரையை
காதல் கொண்டதே,
தாமரை மொட்டும் அவள் மணம் பட்டதும்
அழகாய் மலர்ந்ததே,

செங்காந்தள் மலராய் நீ
ரோசா இதழாய் உன் உதடு,
தாமரையாய் மலர்ந்த முகமது,
சங்குப்பூவாய் ஆன மூக்கது,
செம்பருத்தியாய் காதுகள் மலர
பல மலரின் உருவமடி நீ,
பூ ஒன்று பூவிதழ் தேடுகையில்
அந்த இதழாய் மாறிடுவேன் நானே!

பாசம் கொண்ட பசுந்தளிரே,
அன்புடைய இளம் மலரே,
பூக்களை ரசித்த நான்
பூவிதழை தேடும் பூவை ரசித்தேன்
காதல் கொண்டேன்,
- - - - - - - - - - - - - - - -
அன்புடன்
இல.வீரபாண்டியன்


No comments:

Post a Comment