Sunday, 5 November 2017

இரவின் மடியில்

இரவின்  மடியினில்
-----------------------------
சிட்டுக்குருவிகளே,
சிங்காரக் குருவிகள் ,
அழகாய் பேசிடுமே,
உழைத்து வாழும்
உன்னத பறவையது,
சிறுக சேர்த்து
கூடுகள் அழகாய் கட்டிடுமே,
கூட்டுக்குடும்பமாய் வசித்திடுமே
யார் கண் பட்டதோ தெரியவில்லையே,
தொலைபேசி கோபுரங்களின்
கதிர்வீச்சின் தாக்கமே,
அழிகிறதே! ஒரு இனமே
மனித இனமே
அதனை காக்க வேண்டுமே!
- - - - - - - - - - - - - - - - - - - -
அன்புடன்
இல.வீரபாண்டியன்

No comments:

Post a Comment