Sunday, 5 November 2017

நிலாக்கால இரவுகள்

நிலாக்கால இரவுகள்
---------------------------------
கருமேகங்கள் சூழ்ந்திருக்கையிலே
பவுர்ணமி நிலாப் புறப்பட்டதே,
மேகங்கள் மூடி மறைத்தாலும்
பிறைச் சூடும் நிலா ஒளிர்கிறதே!

இரவின் சாமத்தில்
கடும் குளிர் காலத்தில்
நிசப்தங்கள் ஏதுமில்லை
மலரினும் மென்மையவள், என்னவள்,

அமாவசை இருட்டிலும்
முழு மதியாய் ஒளிர்கிறாள்,
கருமேகத்தில் நிலவும் கூட மறைந்தெழும்,
என்னவள் இருட்டில் கூட
நிலவாய் ஒளிர்ந்திடுவாள்,

நிலவாய் என்னவள் என்னுடன் இருக்க
தேய்பிறை இல்லை,
வளர்பிறையும் இல்லை,
என்னவள் என்னுடன் இருக்கும் வரை
காலங்களில் வரும் அனைத்து இரவுகளும்,
நிலாக்கால இரவுகளே!
-------------------------------------
அன்புடன்
இல.வீரபாண்டியன்

No comments:

Post a Comment