Sunday, 5 November 2017

கொலுசானேன்

கொலுசானேன்
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
வாழைத்தண்டு கால்கள்,
உந்தன் கெண்டைக் கால் அழைக்குதடி,
தங்கக் கொலுசு வாங்கித் தந்தேன்,
தங்க நிறத்தழகி,
விரும்பியே நீயும் அணிந்ததாலே,
மின்னொளியாய் ஒளிர்கிறதே,
உன் புன்னகையிலே
பொன் நகையும் மயங்கியே,
உன் காலில் அணிந்திட
வரம் வாங்கி வந்தது தானே,
உன்னுடன் கூட ஆசைப்பட்டேன்,
நிராசை ஆனதாலே
கொலுசாய் நான் மாறியே
உன் காலில் அடைக்கலம் புகுந்தேன்,
எப்படியும் மனதிலும் இடம் பிடிப்பேன்
- - - - - - - - - - - - - - - - - - - - - - - -
அன்புடன்
இல.வீரபாண்டியன்

No comments:

Post a Comment