வானம் வசப்படும்
- - - - - - - - - - - - -
முயற்சி ஒன்றே போதுமே
அந்த வானம் கூட வசப்படுமே,
இகழ்ச்சிகள் இருந்தால் தானே
நாம் யாரென்று நமக்கே தெரிந்திடுமே,
இகழ்ச்சிகளை புகழ்ச்சிகளாய் மாற்று,
இந்த உலகமே உன்னை கொண்டாடுமே,
தோல்விகள் பல கண்டிட்டாய்
சோர்ந்து மட்டும் உட்கார்ந்திடாதே,
வெற்றிக் கைப்பிடி தூரத்தில் உள்ளது
முயற்சியை கைவிடாதே!
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
அன்புடன்
இல.வீரபாண்டியன்
No comments:
Post a Comment