ஆழ்கடலின் சங்காக,
- - - - - - - - - - - - - - - - - - - - - -
தமிழன் விழமாட்டான்,
தமிழன் என்பான்,
தன் மானத்தை காத்திடுவான்,
தலைநிமிர்ந்தே நடந்திடுவான்,
பண்பாட்டை மதிப்பவன்,
பாரம்பரியத்தை காத்திடுவான்,
அவன் வீழ்ந்ததாக வரலாறு இல்லை,
வாழ்ந்த சரித்திரம் பல உண்டு,
உலகையே ஆண்டவன் அவன்,
நாகரிகத்தை கற்றுக் கொடுத்தவன்,
அவன் ஒற்றுமையை பார்த்ததில்லை,
வரலாறு மட்டும் படித்ததுண்டு,
மெரினாவே அதற்கு சாட்சியாய்,
வங்கக் கடலும் கொதித்ததே,
உணர்வை பார்த்தாய்.
ஒற்றுமையை பார்த்தாய்,
வன்முறை இல்லை,
கலவரம் இல்லை,
இரத்தம் ஒரு துளி சிந்தவில்லை,
ஆண்கள் சிங்கமாய் கர்ஜிக்க
பெண்கள் புலியாய் பாய
தமிழகமே உணர்வில் தத்தளிக்க
அமைதி வழியில் ஒரு போராட்டம்
உலகமே அதிசயமாய் பார்க்க
காந்தி வாழ்ந்த நாடு என்ற
பெயரையும் இங்கு காத்திட்டோம்,
உரிமைதனை மீட்டெடுத்தோம்,
பண்பாட்டை வென்றிட்டோம்,
சல்லிக்கட்டில் மல்லுக்கட்டி
சல்லிக் காசை எடுத்திடுவோம்,
வீரத்தை காட்டிடவே
ஆழ்கடல் சங்காய் நாங்கள்
காத்திருந்து பெற்றுவிட்டோம்
நிலையான வெற்றிதனை.
- - - - - - - - - - - - - - - - - - -
இது என் சொந்தப் படைப்பு
- - - - - - - - - - - - - - - - - - - - -
அன்புடன்
இல.வீரபாண்டியன்
நிருபர்,
தினத்தந்தி,
பாரதியார் வீதி,
வடக்கு பெரியார் நகர்,
விருத்தாசலம்.
கைப்பேசி : 99435 49913
Wednesday, 22 November 2017
ஆழ்கடலின் சங்காக
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment