நெல்லிக்கனி
- - - - - - - - - - - - -
நெல்லிக்கனி மனிதனுக்கு
தேவன் கொடுத்தக் கனி
இயற்கையின் அருட்கொடை
நோய்களை கிருமிகள் தந்திடும்,
நெல்லிக்கனி நோய்களை விரட்டிடும்.
நெல்லிக்கனியை உண்டவர் தன்
மரணத்தைக் கூட தள்ளிப்போடும்
நூறாண்டுகள் வாழ்ந்திடுவார்.
அதியமான் அவ்வைக்கு கொடுத்தான்,
அவ்வையோ அதியமானுக்கு கொடுத்தாள்,
நட்புக்கு பாலமாய் ஆனதொரு நெல்லிக்கனி
கடையேழு வள்ளல்களில்
அதியமானும் சிறந்தவரே,
தமிழை வளர்க்க எண்ணி
அவ்வையின் முதுமை கண்டு வருந்தி
தமிழுக்குத் தொண்டு செய்ய
அவ்வைக்கு ஈன்றானே நெல்லிக்கனியை
நெல்லிக்கனி பெருமைதனை
சொல்லித்தான் தெரியனுமோ!
நெல்லிச் சாறு அருந்திடு
நீண்ட ஆயுளை பெற்றிடு.
நெல்லிக்கனியை மென்றிடு
நல்ல தேகத்தைப் பெற்றிடு .
தினம் ஒரு கனியை உண்டிடு,
நோய்களை எல்லாம் விரட்டிடு.
நெல்லிக்கனி துணையிருந்தால்
எமன் கூட விரட்டிடலாம்.
- - - - - - - - - - - - - - - - - - - - - -
அன்புடன்
இல.வீரபாண்டியன்
No comments:
Post a Comment