Sunday, 5 November 2017

தேனாறு

தேனாறு - 7
- - - - - - - - - - - -
புரட்சி
தமிழன்
ஒற்றுமை
கண்ணியம்
தலைமை
வெற்றி
__________________
புரட்சி செய்யும் தமிழன்
என்றும் வீழ்ந்தது இல்லை,
வீழ்த்தியதே வரலாறாய் நின்றது,
சிங்கத்தையே ஓடவிட்ட தமிழன்
குள்ள நரியிடம் வீழ்ந்திடுவானா,
ஒற்றுமை பிறந்தது,
கத்தியில்லை, ரத்தமில்லை,
தலைமை என்று எவரும் இல்லை
தமிழுக்கு தலை வணங்கிடும் கூட்டம்
வன்முறையின்றி கண்ணியமாய்,
களத்தில் போராட
வீரமாய் புறப்பட்ட தமிழர் கூட்டம்
வீழ்த்தியது பீட்டாவை.
வெற்றி பிரகாசம்,
முகத்தில் தெரிய
சல்லிக்கட்டில் மல்லுக்கட்ட
தயாராய் தமிழர் காளைகள்
--------------------------
அன்புடன்
இல.வீரபாண்டியன்

No comments:

Post a Comment