சுதந்திரக் காற்று
-------------------------
எழுத்துரிமை இல்லை,
பேச்சுரிமை இல்லை,
சுதந்திரம் எதிலும் இல்லை
அடிமைப்பட்ட இந்தியர் எல்லாம்
சுதந்திர தாகம் கண்டோம்
அடிமைதனை களையெடுக்க.
வாணிபம் செய்ய வந்தான்
நாட்டையே ஆண்டுவிட்டான்,
ஆத்திரப்பட்டவன்
தோலுரித்து பதமாக்க
வெகுண்டெழுந்தான் நேதாஜி,
கொடியினை காத்த குமரன்
உயிர் பிரிந்தும்
கைகளை விட்டு கொடி பிரியவில்லையே,
அவன் உயிர், உடல்
இரண்டிலும் கலந்த தாகம்
சுதந்திர தாகம்,
பிறந்தது ஜெய்ஹிந்த் கோஷம்
போர்கள் ஏராளம்,
புரட்சிகள் ஆயிரம்,
சிந்திய ரத்தங்கள்
ஆறாய் பாய
பட்டக் காயங்கள் வீண்,
சுதந்திரக் காற்றை சுவாசிக்க
பலி கொடுத்த உயிர்கள் ஏராளம்
கத்தியின்றி ரத்தமின்றி
பிறந்தது புது முழக்கம்
உலக உத்தமரின் பின்னால்
திரண்டது இந்தியர் கூட்டம்,
அறவழியில் போராட்டம்,
வெகுண்டெழுந்தது இந்தியா
அடி பணிந்தது இங்கிலாந்து,
இந்திய நாடு இந்தியர்களுக்கே
கோட்டையில் ஏறியது மூவர்ணக்கொடி
இந்தியாவில் வீசியது சுதந்திரக் காற்று.
________________
அன்புடன்
இல.வீரபாண்டியன்
No comments:
Post a Comment