என்னை மீட்ட வருவாயா
- - - - - - - - - - - - - - - - - - - - - -
கண்ணில் மின்னிடும் புன்னகை நிலவே,
பொன் நகையும் உன் புன்னகையின் அடிமையடி,
தேவர்கள் கண்கள் உன் மீதடி,
ஊர்வசி, ரம்பை நாட்டியம் கூட
உன் நடையின் அழகில் தோற்றுவிடும்.
ராகங்கள் மீட்டி பாடிட்டேன்,
ராகமாய் வந்துப் போனாய்,
சொற்கள் கட்டி பாடினேன்
பாமாலையாய் ஆனாய் நீயே,
பொய் பேச முடியலையே
கவிதையாய் நான் வடிக்கின்றேன்,
தங்க நிறத்தழகியே,
கருத்த மச்சான் என்று நினைத்திடாதே,
பூலோக தேவதையே
காற்றாய் நீயும் வந்திடடி
இந்திரன் வீட்டு சுந்தரியே
மழையாய் இறங்கி வந்திடடி,
தேவலோக தேவி நீயே
தேனாய் வந்து இனித்திடடி,
தெருக்கோடியில் நடந்து வந்தாய்,
தெருவெல்லாம் திருவிழாக் காண
கடைக்கோடியில் நிற்கிறேன் நானும்
என்னை மீட்ட வருவாயா,
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
அன்புடன்
இல.வீரபாண்டியன்
Sunday, 5 November 2017
என்னை மீட்ட வருவாயா
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment