நன்றி் கெட்ட மனிதா
- - - - - - - - - - - - - - - - - - - - -
நன்றி கெட்ட மனிதா
பொய் வேஷம் போடாதே,
ஆணவம் கண்டு ஆடாதே,
போலியாய் வாழ்க்கை வாழாதே,
பொது நலத்தை மறந்து வாழ்கிறாய்
சுயநலத்தை மட்டுமே போதிக்கின்றாய்,
இரத்தம் கொடுத்தவனை மறவாதே,
வேலை முடிந்ததும் இகழாதே,
கதையில் படித்த ஞாபகம்
நரியிடம் காக்கை ஏமாந்த கதையது,
நன்றி கெட்ட நரியாலே
காகம் ஏமாந்து போகவில்லை
நரியே பாவத்தை சுமந்தது,
சிறிது காலமே உனக்கு ஆயுள் உண்டு,
அதிலே நல்லதை செய்தே வாழ்ந்திடு
செய்த உதவியை மறக்காதே,
உதவியப்பின் இகழ்ந்து பேசாதே,
உணவு ஒரு முறை கொடுத்ததாலே
நாயும் நன்றியுடனே வாலை ஆட்டும்,
பாசமாய் நீயும் பழகிட்டால்
உயிரைக் கூட உனக்காகக் கொடுக்கும்.
அந்த எண்ணம் இல்லாத மனிதா
நன்றி கெட்டு நீ வாழ்ந்தென்ன பயன்
--------------------------
அன்புடன்
இல.வீரபாண்டியன்
No comments:
Post a Comment