சாதிக்கப் பிறந்தாய்
---------------------------------
மனிதா நீ சாதிக்கப் பிறந்தாய்,
எட்டிப் பிடிக்கும் தூரத்தில் வாய்ப்புண்டு,
வந்த வாய்ப்பை நழுவ விடாதே!
நேரம் கடந்தால் திரும்பாது.
ஒவ்வொரு நொடியும் முக்கியம்,
நம்மை நாமே செதுக்க வேண்டும்,
முழு மனிதனாய் உருவெடுத்து
உழைப்பை மட்டும் மூலதனமாக்கி
நினைத்ததை சாதித்திடுவாய்,
வாழ்க்கையில் உயர்ந்திடுவாய்!
- - - - - - - - - - - - - - - - - - - - - - - -
அன்புடன்
இல.வீரபாண்டியன்
சோம்பல் ஒன்றே நேரத்தின் எதிரி,
நேரமும் சோம்பலும் இணைந்தால்
நமக்கு எதிரி,
பொன் போன்ற நேரத்தை
நல்லதாகவே கழித்திடுவோம்,
நாளை என்ற சொல்லகற்றுவோம்.
No comments:
Post a Comment