Wednesday, 22 November 2017

கண்ணகி

படப் போட்டி சிறப்பு சான்றிதழ் போட்டியாளர்
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
தமிழச்சி அவள்
சினங்கொண்டு எழுந்தாள்,
கண்கள் சிவந்தாள்,
மதுரையே அதிர்ந்தது,
தென்றல் காற்றும் புயலாய் மாற,
இடிமுழக்கம் செவியை கிழித்திட,
மின்னலாய்  தோன்றினாள்,
என் கணவன் கள்வன் என்றீரோ,
ஒரு சிலம்பு அங்கே
என் சிலம்பு இங்கே
இதோ பாரீர் என
சிலம்பை வீச
சிலம்பின் மாணிக்கம் தெறித்து ஓட
தவறிழைத்த பாண்டியன் மாள
தமிழ் வளர்த்த நகரம்
பற்றி எரிய
உத்தமியானாள் கண்ணகி.
------------------------------------------
அன்புடன்
இல.வீரபாண்டியன்

No comments:

Post a Comment