Sunday, 5 November 2017

கனவு குதிரைகள்

கனவுக் குதிரைகள்
____________________
உடுக்க உடையின்றி திரியும் கூட்டம்
மன மகிழ்வோடு உதவிட்டேன்,
உடைகள்  வண்ணமாய் அணிய
மகிழ்ச்சி நிறைந்த
வாழ்க்கையாய் மாற்றினேன்,
கையேந்தும் கூட்டத்தை கண்டேன்
உழைத்து வாழக் கற்றுக்கொடுத்தேன்,
சாலையோரம் முதியவர் கூட்டம்
அவர்களின் பிள்ளையாய்
தோள் கொடுத்தேன்,
கோட்டை ஒன்று கட்டிக் கொடுத்தேன்,
பெருவாழ்வை பார்த்திட்டேன்,
குடிசை வீடுகளை கண்டேன்,
மாளிகை வீடுகளை கட்டிக் கொடுத்தேன்,
நலிவடைந்தவர்களை கண்ணில் கண்டேன்
நலமுடன் வாழ உதவிகள் செய்தேன்,
சாதி சண்டைகள் பார்த்தேன்,
சமாதானமாய் வாழ உதவிட்டேன்,
மக்களுக்கு குறை என்று வந்திட்டால்
தயங்காமல் தீர்த்து வைத்தேன்,
ஊழலை ஒழித்தேன்,
நதிகளை இணைத்தேன்,
நாட்டு மக்கள் தன்னிறைவாய் வாழ.
விழித்துப் பார்த்தேன்
கண்டது கனவென்று
கனவுக் குதிரையில்
நான் இந்நாட்டு
முதல்வராக பயணித்தேன்
----------------------------------------------
அன்புடன்
இல.வீரபாண்டியன்

No comments:

Post a Comment