Sunday, 5 November 2017

மீன் குழம்பு

மீன் குழம்பு
-------------------
ஆற்றங்கரையில தண்ணீர் ஓடையில
மீன் குஞ்சுகள் துள்ளிக் குதித்திட
அக்கா மகள் மாராப்பை எடுத்து
மீனும் பிடித்து விட்டோம்,
கண்கள் இரண்டும் பேசிக் கொள்ள
மார்பின் அழகினிலே,
இரண்டு மீன்கள் விடுபட முயன்றிட
நட்பும் அது காதலாகி போனதே,
நாணம் கொண்ட என் சுந்தரி ஓடிச் செல்ல
கமகமக்கும் வாசனை,
ஊரையே கூட்டியது,
அக்கா மகள் கைப்பட்ட
மீன் குழம்பின் சுவையது,
காதல் உணர்வும்
மீன் குழம்பின் சுவையும்,
சேர்ந்தே மணக்குது,
அன்பின் உச்சம் காதலாகி
காதலின் உச்சம் காமமானதே,
மீன் குழம்பின் வாசத்தாலே,
- - - - - - - - - - - - - - - - - - - -
அன்புடன்
இல.வீரபாண்டியன்

No comments:

Post a Comment