Wednesday, 22 November 2017

தேனாறு

தேனாறு - 6
- - - - - - - - - - - -
வந்தாரை வாழவைக்கும்  தமிழகம்
இங்கு வாழ்ந்தவர் கோடி,
வீழ்ந்தவர் இல்லை.
துன்பத்தைப் போக்கி
இன்பத்தை வரவேற்க,
இனிய நாள் தமிழர் திருநாள்.
பழையன கழிந்து
புதியன புகுத்திட
உண்டி கொடுத்தோர்
உயிர்கொடுத்தோர்,
அந்த உணவை
படைக்கும் சூரியனை
உழவர்கள் வணங்கிடும் நாள்
உழவனுக்கு உதவிடும் காளைகளே
செழிப்புதனைக் காண
கடமையை செய்திடுமே
அதற்கு ஒரு நாள் மாட்டுப்பொங்கல்
மக்கள் உழைத்த களைப்பு நீங்கிட
விடுமுறை பொங்கல்
அது  காணும் பொங்கல்
____________________________
அன்புடன்
இல.வீரபாண்டியன்

No comments:

Post a Comment